மழைக்காக காத்திருக்கும் தேசிய விருது டீம்!

மழைக்காக காத்திருக்கும் தேசிய விருது டீம்!

செய்திகள் 6-Mar-2014 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதல்’, ‘கல்லூரி’, ‘வழக்கு எண் 18/9’ என குறிப்பிடத்தக்க சில படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல், அடுத்து இயக்கும் படத்திற்கு ‘ரா… ரா… ரா… ராஜசேகர்’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார். லிங்குசாமியின் ‘திருபத்தி பிரதர்ஸ்’ நிறுவனத்துக்கு முதல் பிரதி அடிப்படையில் தனது ‘எஸ்.கே. டாக்கீஸ்’ நிறுவனம் சார்பில் பாலாஜி சக்திவேல் தயாரித்து, இயக்கும் இப்படத்தில் லிங்குசாமியின் உறவினர் மதி ஹீரோவாக அறிமுகமாகிறார். முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்து இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ’கோலிசோடா’ புகழ் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பசுமையான மலைப் பிரதேசங்கள் மற்றும் மழைப் பின்னணியில் சொல்லப்படவிருக்கும் கதையாம் இது! இதனால் கேரளாவில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ள பாலாஜி சக்திவேல், அங்கு மழை சீசன் துவங்கியதும் படப்பிடிப்பை துவங்கவுள்ளார். ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற லிங்குசாமி – பாலாஜி சக்திவேல் டீமின் அடுத்த படைப்பு இந்த ‘ரா… ரா.. ரா.. ராஜசேகர்’!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - காதலாட பாடல் வீடியோ


;