அஜித்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

அஜித்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!

செய்திகள் 6-Mar-2014 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல், விஜய், சூர்யா, விக்ரம் உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ‘தல’ அஜித்துக்கும் இதுவரை இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. தற்போது, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்க ஹாரிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவிருக்கிறது. இப்படம் முடிவடைந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்கிறார்கள். முதலில் இந்தக் கதையை ரஜினிக்குதான் சொன்னாராம் கே.வி.ஆனந்த். ஆனால், இந்தக் கதைக்கு பொருத்தமானவர் அஜித்தான் என ரஜினியே சொல்லி கே.வி.ஆனந்தை ‘தல’யிடம் அனுப்பி வைத்தார் என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ ஹாரிஸின் நீண்டநாள் ஆசை தற்போது இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நிறைவேறப் போகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;