பில்லியன் டாலர் கிளப்பில் ‘ஃப்ரோஸன்’!

பில்லியன் டாலர் கிளப்பில் ‘ஃப்ரோஸன்’!

செய்திகள் 5-Mar-2014 4:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று அனைவரின் புருவத்தையும் உயர வைத்த ஹாலிவுட் அனிமேஷன் படமான ‘ஃப்ரோஸன்’, தற்போது மேலும் ஒரு சாதனையைச் செய்துள்ளது. அதாவது கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி உலகெங்கும் வெளியான இப்படம் இதுவரை பில்லியன் டாலர்களை (கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய்) வசூலித்து சாதனை படைத்துள்ளது. 900 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் படம் உள்நாட்டில் 2500 கோடிகளையும் வெளிநாடுகளில் 3500 கோடிகளையும் வசூலித்து இன்னமும் உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது இப்படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் வேறு கிடைத்துள்ளதால் படத்தின் மீது மீண்டும் கவனம் திரும்பி மேலும் பல கோடிகளை அள்ளும் என இதன் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;