விஜய் பாடலுக்கு ஆரூடம் சொன்ன அஜித்!

விஜய் பாடலுக்கு ஆரூடம் சொன்ன அஜித்!

செய்திகள் 5-Mar-2014 3:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குனர் விஜய்யை தமிழ்சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் நடிகர் அஜித். அப்படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய் இயக்கிய படங்களைப் பார்த்துவிட்டு முதல் ஆளாகப் பாராட்டுவது அஜித்தின் வழக்கமாம். அவருடைய ‘மதராசப்பட்டினம்’ படம் அஜித்தின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது.

‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றபோது, விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் படப்பிடிப்பு அங்கேதான் நடந்து கொண்டிருந்தது. அப்போது ‘தலைவா’ ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த அஜித்திடம், நடிகர் விஜய் ‘தலைவா’ படத்தில் பாடிய பாடலான ‘வாங்ண்ணா வணக்கங்கண்ணா’வை போட்டுக் காண்பித்தாராம் இயக்குனர் விஜய். அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, ‘இது மிகப்பெரிய ஹிட்’ என அப்போதே சொல்லியிருக்கிறார் அஜித். அந்தப் பாடலைக் கேட்ட முதல் ஆளும் அஜித்தானாம்.

‘தலைவா’ படம் வெளியாகி ‘வாங்கண்ணா...’ பாடல் சூப்பர் ஹிட்டான பிறகு, தற்போது பார்ப்பவர்களிடமெல்லாம் இந்த நல்ல சேதியை சொல்லிச் சொல்லி வியக்கிறாராம் இயக்குனர் விஜய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;