கோடையில் வரும் விஜய்யின் ‘சைவம்’!

கோடையில் வரும் விஜய்யின் ‘சைவம்’!

செய்திகள் 5-Mar-2014 1:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் ‘சைவம்’. இப்படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘இது முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும். நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது. நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை.

நாசர் சார் தன்னுடைய வாழ்நாள் சாதனையாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை நட்சத்திரம் சாரா ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடித்ததைவிட பல மடங்கு உயரத்தை நடிப்பால் தொட்டு இருக்கிறார். ‘லுதுப்’ எனும் ‘பாஷா’ பெயரில் அறிமுகமாகும் நாசர்- கமீலா நாசர் தம்பதியரின் மகன் இந்த படத்தில் ரகளை படுத்தி இருக்கிறார்.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். ‘சைவம்’ இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;