இன்றைய பிறந்தநாள் பிரபலங்கள்!

இன்றைய பிறந்தநாள் பிரபலங்கள்!

செய்திகள் 5-Mar-2014 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மனித வாழ்க்கையில் ஒழுக்கம், அன்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் இவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட நம்பியார், சபரிமலைக்கு பாதயாத்திரை செல்வதில் நடிகர்களுக்கெல்லாம் முன்னோடி. குருசாமி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நம்பியார் கடந்த 2008ஆம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு நீங்கினார். மறைந்தாலும் மங்காப் புகழோடு இருக்கும் நம்பியார் பிறந்த தினம் இன்று (மார்ச் 5).

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல முகங்கள் கொண்டவர் நடிகர் நாசர். எந்த வேடமாக இருந்தாலும் அதை யதார்த்தமாக செய்து முடிப்பதில் நாசருக்கு நிகர் நாசரே. வருடத்திற்கு 10 படங்களுக்கும் மேல் நடிக்கும் நாசர் இந்த வருட ஆரம்பத்தில் ‘வீரம்’ படத்தில் தமன்னாவிற்கு அப்பாவாக நடித்திருந்தார். அதேபோல் தற்போது வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’ படத்தில் நாடகக் குழு ஒன்றின் குருவாக நடித்து வருகிறார். இந்த ‘அவதார’ நடிகருக்கும் இன்றுதான் பிறந்தநாள்.

‘போடா போடி’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் இன்றே பிறந்தநாள். விஷாலுடன் இவர் நடித்த ‘மத கஜ ராஜா’ விரைவில் வெளிவரவிருக்கிறது. தவிர இயக்குனர் பாலா கரகாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கவிருக்கும் படத்தின் நாயகிகளில் வரலட்சுமியும் ஒருவர்.

இன்று பிறந்தநாள் காணும் நாசருக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;