தியேட்டர்ல 4 பேர்!

தியேட்டர்ல 4 பேர்!

செய்திகள் 5-Mar-2014 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

டைட்டிலைப் படிச்சதும் எந்தப் படம் பார்க்குறதுக்கு வெறும் 4 பேரு மட்டும் தியேட்டருக்கு வந்திருக்காங்கன்னு யோசிக்காதீங்க... ‘தியேட்டர்ல 4 பேர்’ங்கிறது ஒரு படத்தோட பேராம். ‘ஸ்ரீ யஷ்வதி ஃபிலிம்ஸ்’ என்ற பேனரின் மூலம் பி.டி.எஸ்.ஞானேஸ்வரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் கதையை எழுதி இயக்குபவர் ஸ்ரீனிவாச ராஜு. திகில் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஜான் கவனித்துக் கொள்ள, இசையமைக்கிறார் சின்னா. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு பாப்கார்ன் டப்பாவிலிருந்து ஒரு கை வெளியே வருவதுபோல் வடிவமைத்து பயமுறுத்தியிருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெட்ராஸ் - "நான் நீ" பாடல் வீடியோ


;