நஸ்ரியா படத்தின் பாடல்கள் எப்போது?

நஸ்ரியா படத்தின் பாடல்கள் எப்போது?

செய்திகள் 5-Mar-2014 10:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கும் படம் ‘வாயை மூடி பேசவும்’. மலையாள ஜோடிகளான துல்கர் சல்மான், நஸ்ரியா இணைந்து நடிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை வரும் மார்ச் 14ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். ‘ஸ்டேஜ் ஸோ’ புகழ் ‘சீன் ரோல்டன்’ என்றழைக்கப்படும் ராகவேந்திரா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தின் ஆல்பத்தில் ‘ஹூஹா...’ என்ற தீம் மியூசிக்கிற்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார்.

‘ரேடியன்ஸ் மீடியா’, ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சௌந்தர்ராஜன். பாடல்கள் வெளியாகும் மார்ச் 14ஆம் தேதியே, அதிகாரப்பூர்வ டிரைலரையும் வெளியிடுகிறார்கள். படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கிறது ‘திங் மியூசிக்’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - கருக்கு கல்லாங்கோலு பாடல் வீடியோ


;