’சுப்ரமணியபுரம்’ சுவாதியின் கார்த்திகேயன்!

’சுப்ரமணியபுரம்’ சுவாதியின் கார்த்திகேயன்!

செய்திகள் 4-Mar-2014 2:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சின்ன படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அதை போன்ற படங்களை தயாரிக்க ஊக்குவிக்கிறது . இந்த வரிசையில் தயாராகி வரும் ஒரு படம் ' கார்த்திகேயன் ' . மேக்னஸ் சினி பிரைம் மற்றும் நவ்யா விஷுவல் மீடியா ஆகிய நிறுவங்களின் சார்பில் பிவி. ஸ்ரீநிவாஸ் மற்றும் மல்லிகார்ஜுன் தயாரிக்கும் இந்த படத்தில் ‘சுப்ரமணியபுரம்’ புகழ் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார் .அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க , ஜெயபிரகாஷ், கிஷோர், ' பண்ணையாரும் பத்மினியும் ' படப்புகழ் துளசி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி என்பதை குறித்த படமாம் ' கார்த்திகேயன் '. அறிமுக இயக்குனர் சந்து இயக்கும் இப்படத்திற்கு சேகர் சந்திரா இசை அமைக்கிறார் . இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;