வெளிநாட்டை தவிர்த்த விஷால் டீம்!

வெளிநாட்டை தவிர்த்த விஷால் டீம்!

செய்திகள் 4-Mar-2014 1:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

திரு இயக்கத்தில் விஷால் – லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டை காட்சியின் படப்பிடிப்பு மட்டும்தான் பாக்கி இருக்கிறது! அந்தப் பாடலில் விஷாலுடன் இனியா இணைந்து ஆட இருக்கிறார். இந்தப் பாடலை சென்னை அருகேயுள்ள மாதவரத்தில் படமாக்க இருக்கிறார்கள்.

திரு இயக்கத்தில் விஷால் நடித்த, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ மற்றும் ‘சமர்’ ஆகிய படங்களின் சில காட்சிகளை பாங்காங் போன்ற வெளிநாடுகளில் படமாக்கிய திரு, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இரண்டு பாடல்களை குலுமணாலி, ராஜஸ்தானில் படமாக்கியதோடு, மற்ற காட்சிகளை எல்லாம் முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலேயே படமாக்கியுள்ளார்! விஷாலின் ‘விஷால் ஃபிலிம் பேக்டரி’ தயாரிக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 13-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;