‘ஜிகர்தண்டா’ விழாவை தவிர்த்தது ஏன்? - லட்சுமி மேனன்

‘ஜிகர்தண்டா’ விழாவை தவிர்த்தது ஏன்? - லட்சுமி மேனன்

செய்திகள் 4-Mar-2014 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை லட்சுமி மேனன் தான் நடிக்கும் படம் சம்பந்தமான விழா, புரொமோஷன் நிகழ்ச்சிகள் எதுவானாலும் அதில் கலந்துகொள்ள பெரும்பாலும் தவறுவதில்லை ஆனால் நேற்று சென்னையில் நடந்த ‘ஜிகர்தண்டா’ ஆடியோ வெளியீட்டு விழாவில் லட்சுமி மேனன் மிஸ்ஸிங்! படத்தின் ஹீரோயினாச்சே, எங்கே ஆளை காணோம் என்றால், இங்கு விழா நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில் அவர் எர்ணாகுளத்தில் தான் படிக்கும் பள்ளியில் ‘ப்ளஸ் ஒன்’ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தார்! படித்துக் கொண்டே நடித்து வரும் லட்சுமி மேனன் அந்த பள்ளியின் ஸ்பெஷல் அனுமதி பெற்றுதான் சினிமாவில் நடித்து வருகிறார். இந்தப் பள்ளியின் ஆசிரியைகளில் லட்சுமியின் தாயாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது! வணிகவியலுக்கு படித்து வரும் லட்சுமி மேனன் இன்னும் 5 பரீட்சைகள் எழுத இருக்கிறார். இதனால் தான் தன்னால் ’ஜிகர்தண்டா’ விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்றார் லட்சுமி மேனன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;