வருகிறது ’குக்கூ’

வருகிறது ’குக்கூ’

செய்திகள் 4-Mar-2014 10:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ’குக்கூ’. 'அட்டக்கத்தி' தினேஷ், மாளவிகா நாயர் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டு பார்வையற்றவர்களின் காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ’ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் ’குக்கூ’வை வருகிற 21-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பார்வையற்றவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கமல்ஹாசனின் ‘ராஜபார்வை’, விக்ரம் நடித்த ’காசி’ பட வரிசையில் ’குக்கூ’ ரசிகர்களிடையே நிச்சயம் வரவேற்பை பெறும் என்கின்றனர் திரையுலக பிரபலங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;