‘நானாபடேகருக்கு பிறகு சித்தார்த் தான்’! பாரதிராஜா

‘நானாபடேகருக்கு பிறகு சித்தார்த் தான்’! பாரதிராஜா

செய்திகள் 3-Mar-2014 4:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சித்தார்த், லட்சுமி மேனன் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி விரைவில் வெளிவரவுள்ள படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில் கலந்துகொண்டு படத்தின் இசையை வெளியிட்டு பாரதிராஜா பேசியபோது, ‘‘மதுரையை மையமாக வைத்து படம் எடுப்பது பெருமையாக இருக்கிறது. அதே சமயத்தில் மதுரை என்றாலே கொலை, அன்டர்வேர்ல்டு சமச்சாரங்கள் அதிகமாக நடப்பது போல காண்பிக்கிறார்கள். அது தவறு. ஒருகாலத்தில் மதுரை அப்படி இருந்த்திருக்கலாம், ஆனால் இப்போது அப்படியில்லை.

இன்றைக்கு செய்தித் தாளைப் படிக்கும்போது ரேப், கொலை, வெட்டு, குத்து என சமூகம் வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. நம் படங்களும் அதை தூண்டிவிடும்படியாக இருந்துவிடக் கூடாது. வன்முறை தேவைதான். ஆனால் அதை குறைத்துக்கொள்ளுங்கள். இளைய இயக்குனர்கள் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை அபாரமாக உயர்ந்து உள்ளனர். ஆனால் கதையில் அப்படியில்லை. கோடி கோடியாக பணம் போட்டு எடுக்கும் படங்களில் பிரம்மாண்டம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. கதை நிலைப்பதில்லை. மக்கள், மண் சார்ந்த படங்கள் மட்டுமே காலம் கடந்து நிற்கும். தொழில் நுட்பத்துடன் அழுத்தமான கதையையும் கொடுக்கவேண்டும்.

சித்தார்த் அருமையான நடிகர். ஒப்பனையில்லாமல் அதாவது நடிப்பது தெரியாமல் நடிப்பவர். இன்றுவரை நானா படேகர் நடிப்பது தெரியாது. அவரது நடிப்பு இயற்கையாக இருக்கும். அவருக்கு பிறகு சித்தார்த் நடிப்பது தான் இயற்கையாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் மட்டும் அவர் நடிப்பது தெரிகிறது.

எந்தவிதமான பிரம்மாண்டமும் இல்லாமல் மூளையை நம்பி மட்டுமே மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட 'பீட்சா', இயக்குனரின் திறமையால் ஜெயித்த படம். அபாரமான திறமை கொண்டவர் 'ஜிகர்தண்டா' இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அவருடைய உருவத்தைப்போலவே திறமையும் கொண்டவர். 'ஜிகர்தண்டா' படத்தின் காட்சிகளும், பாடலும் நன்றாக இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெற்றுதரும்' என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;