7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘கிராவிட்டி’!

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘கிராவிட்டி’!

செய்திகள் 3-Mar-2014 11:32 AM IST Chandru கருத்துக்கள்

ஹாலிவுட் படங்களுக்கு கிடைக்கும் உச்ச கௌரவமாக கருதப்படும் இந்த வருடத்திற்கான அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததைப் போலவே ‘கிராவிட்டி’ படம் 7 அவார்டுகளை அள்ளிக் குவித்தது. அதேபோல, ‘டேலஸ் பையர்ஸ் கிளப்’, ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ ஆகிய திரைப்படங்கள் 3 விருதுகளையும், லியார்னடோ டிகாப்பிரியோ நடித்த ‘தி கிரேட் கேட்ஸ்பை’, அனிமேஷன் படமான ‘ஃப்ரோஸன்’ ஆகியவை 2 விருதுகளையும் பெற்றன. முழுமையான ஆஸ்கர் விருதுப் பட்டியல்...

சிறந்த படம் : 12 இயர்ஸ் எ ஸ்லேவ்
சிறந்த இயக்குனர் : அல்போன்ஸோ குவரான் (படம் : கிராவிட்டி)
சிறந்த நடிகர் : மேத்யூ மெக்கானகே (படம் : டேலஸ் பையர்ஸ் கிளப்)
சிறந்த நடிகை : கேட் பிளான்செட் (படம் : ப்ளூ ஜாஸ்மின்)
சிறந்த துணை நடிகர் : ஜேரெட் லெடோ (படம் : டேலஸ் பையர்ஸ் கிளப்)
சிறந்த துணை நடிகை : லூப்பிடா யோங் (படம் : 12 இயர்ஸ் எ ஸ்லேவ்)
சிறந்த நேரடி திரைக்கதை : ‘ஹெர்’ (எழுதியவர் : ஸ்பைக் ஜோன்ஸ்)
சிறந்த தழுவல் திரைக்கதை : ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ (எழுதியவர் : ஜான் ரிட்லி)
சிறந்த பாடல் : ‘ஃப்ரோஸன்’ படத்தின் ‘லெட் இட் கோ....’
சிறந்த இசை : ஸ்டீவன் பிரைஸ் (படம் : கிராவிட்டி)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : கேத்ரின் மார்டின், பெவர்லே டன் (படம்: ‘தி கிரேட் கேட்ஸ்பை’)
சிறந்த எடிட்டிங் : மார்க் சங்கர், அல்போன்ஸோ குவரான் (படம் : கிராவிட்டி)
சிறந்த ஒளிப்பதிவு : இம்மானுவேல் லூபஸ்கி (படம் : கிராவிட்டி)
சிறந்த சவுன்ட் எடிட்டிங் : க்ளென் ஃப்ரீமேன்டில் (படம் : கிராவிட்டி)
சிறந்த சவுன்ட் மிக்ஸிங் : ஸ்கிப் லீவ்ஸோ, நிவ் அடிரி, கிறிஸ்டோபர் பென்ஸ்டெட், கிறிஸ் முன்ரோ (படம் : கிராவிட்டி)
சிறந்த வெளிநாட்டுப் படம்: தி கிரேட் ப்யூட்டி (இத்தாலி)
சிறந்த டாக்குமென்டரி படம் : ட்வென்டி ஃபீட் ஃப்ரம் ஸ்டார்டோம்
சிறந்த டாக்குமென்டரி குறும்படம் : தி லேடி இன் நம்பர் 6
சிறந்த குறும்படம் : ஹீலியம்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் : கிராவிட்டி
சிறந்த அனிமேஷன் படம் : ‘ஃப்ரோஸன்’
சிறந்த அனிமேஷன் குறும்படம் : ‘மிஸ்டர் ஹப்லோ’
சிறந்த ஒப்பனை : அட்ரிதா லீ, ராபின் மேத்யூஸ் (படம் : டேலஸ் பையர்ஸ் கிளப்)
சிறந்த ஆடை வடிவமைப்பு : கேத்ரின் மார்ட்டின் (படம்: ‘தி கிரேட் கேட்ஸ்பை’)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;