வந்துவிட்டார் வடிவேலு!

வந்துவிட்டார் வடிவேலு!

செய்திகள் 3-Mar-2014 10:40 AM IST VRC கருத்துக்கள்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’. ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ போன்ற படங்களின் வரிசையில் வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கும் படம். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்க, படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. யுவராஜ் தயாளன் இயக்கி வரும் இந்தப் படத்தின் வசனங்களை ஆரூர்தாஸ் எழுத, ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் ‘கோச்சடையான்’, கமலின் ‘விஸ்வரூபம் 2’, ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்களும் ஏப்ரல், மே மாதங்களில் திரைக்கு வரவிருப்பதால் ரசிகர்களுக்கு இந்த கோடைக்காலம் ஸ்பெஷல்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 . 0 டீஸர்


;