‘உத்தம வில்லன்’ புதிய தகவல்கள்!

 ‘உத்தம வில்லன்’ புதிய தகவல்கள்!

செய்திகள் 1-Mar-2014 6:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’விஸ்வரூபம் 2’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தின் முதல் போஸ்டரில் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமும், கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கமலின் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்தப் படத்திற்கும் இசை அமைப்பாளர்! படத்தின் கதை, திரைக்கதையை கம்லஹாசனே எழுதியிருக்க, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார்.

இந்தப் படத்தின் முதல் போஸ்டரில் இடம் பெற்றுள்ள ‘உத்தம வில்லன்’ என்ற டைட்டிலை வில்லு பாட்டில் பயன்படுத்தும் இசை கருவியான வில்லின் வடிவத்தில் அமைத்திருப்பதை பார்க்கும்போதும், அந்த காலத்து கூத்து கலைஞர்களின் முக ஒப்பனையை நினைவுப்படுத்துகிற மாதிரியான கமலின் படம் இடம் பெற்றிருப்பதை பார்க்கும்போதும், இது சரித்திர கால கதையை பின்னணியாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;