மலையாள சினிமாவில் பாரதிராஜா!

மலையாள சினிமாவில் பாரதிராஜா!

செய்திகள் 1-Mar-2014 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் மலையாள சினிமாவின் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து கேரள அரசு விருது வழங்கி வருகிறது. சிறந்த கலைஞர்களை தேர்வு செய்வதற்காக, சினிமாவில் அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து ஒரு தேர்வுக் குழுவை அமைப்பது வழக்கம்! இந்த வருடத்தின் தேர்வு குழுவின் தலைவராக ’இயக்குனர் இமயம்’ பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான தேர்வுக் குழுவினர் விருதுகளுக்கான சிறந்த படங்களை, கலைஞர்களை தேர்வு செய்வார்கள். அதன் பிறகு கேரள அரசு சார்பில் நடைபெறும் விழாவில் கேரள முதல்வர் கலந்துகொண்டு விருதுகளை வழங்குவார். கேரள அரசு விருது கமிட்டியின் தலைவராக பாரதிராஜா தேர்வாகியிருப்பது அவருக்கு கிடைத்த மிகப் பெரிய ஒரு கௌரவம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;