‘பூலோகம்’ படத்தில் மயான கொள்ளை!

‘பூலோகம்’ படத்தில் மயான கொள்ளை!

செய்திகள் 1-Mar-2014 10:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாசார விழாவா கொண்டாடப்படும் மசான கொள்ளை என்று அழைக்கப்படும் மயான கொள்ளை திருவிழா சமீபத்தில் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ‘ஆஸ்கார் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை அமைப்பில், ’ஜெயம்’ ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் படம் 'பூலோகம்'. இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் மசான கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்த கலாசாரத்தை முழுமையாக காண சென்னையிலுள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர் . இந்த விழாவை கண்ட ’ஜெயம்’ ரவி ' இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்படத்தில் நடிப்பது அளவிட முடியாத பெருமை என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;