தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் பாலிவுட்!

கட்டுரை 28-Feb-2014 4:16 PM IST VRC கருத்துக்கள்

சமீபகாலமாக பாலிவுட்டில் தயாராகும் பல படங்களில் தமிழ்நாடும், தமிழ் கேரக்டர்களும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன! இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உட்பட பல படங்களை சொல்லலாம்.

’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பது மாதிரியே சித்தரித்திருப்பார்கள்! படத்தின் கதைபடி ஹீரோவாக வரும் ஷாருக்கான், தமிழ் பெண்ணாக வரும் தீபிகா படுகோனேவுக்கு ஒரு உதவி செய்யப் போய் மாட்டிக் கொள்கிறார். அதன் பிறகு ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், சம்பவங்கள் என பயணிக்கும் கதையில் கடைசியில் இருவரும் இணைவது மாதிரி காட்டப்பட்டிருக்கும்! இதில் ஹீரோயினாக, தமிழ் பெண்ணாக தீபிகா படுகோனே நடிக்க, அவரது அப்பாவாக நிஜத்திலும் தமிழரான சத்யராஜ் நடித்திருப்பார்! ஷாருக்கான் தயாரித்து, ரோஹித் ஷெட்டி இயக்கிய இப்படம் வசூலில் சாதனை புரிந்தது நாடே அறியும்!

’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு முன் ராணி முகர்ஜி முக்கிய கேரக்டரில் நடித்து வெளிவந்த ’அய்யா’ ஹிந்திப் படத்திலும் தமிழையும், தமிழ் கேரக்டரையும் மையப்படுத்தி சித்தரித்திருந்தார்கள்! இந்தப் படத்தின் கதையில் மராட்டி பெண்ணாக வரும் ராணி முகர்ஜி, தமிழ் இளைஞரான சூர்யா (பிருத்திவி ராஜ்) மீது காதல் கொள்வதும், அதனால் ஏற்படும் திருப்பங்கள், கிளைமேக்ஸ் என்று இப்படத்திலும் தமிழ் முக்கிய இடம் பிடித்திருந்தது. சச்சின் குந்தல்கர் இயக்கிய இப்படமும் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க மற்றொரு படமாக அமைந்தது வித்யா பாலன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘டர்ட்டி பிக்சர்’. இந்தப் படம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவையே கலக்கிய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவின் கேரக்டரில் தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட வித்யா பாலன் நடித்து, பாக்ஸ் ஆஃபீசில் பெரிய வசூலை கொடுத்தார் என்பது இந்திய சினிமா உலகமே அறியும்!

மேற்குறிப்பிட படங்களின் வரிசையில் தமிழுக்கும், தமிழ் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு, விரைவில் மற்றுமொரு ஹிந்திப் படம் திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் பெயர் ‘2 ஸ்டேட்ஸ்’. இந்தப் படத்தின் கதை தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களை பற்றியது. . படத்தின் கதைப்படி ஹீரோ பஞ்சாபி இளைஞன்! ஹீரோயின் தமிழ் பெண்! இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. இதனால் இவர்களது குடும்பத்தினருக்கிடையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை சுவாரஸ்யாக சொல்லும் கதையே ‘2 ஸ்டேட்ஸ்’ இந்தப் படத்தில் பஞ்சாபி இளைஞனாக அர்ஜுன் கபூர் நடிக்க, தமிழ் பெண்ணாக அலியா பட் நடித்திருக்கிறார். அலியாவின் அம்மாவாக நம்ம ஊர் ரேவதி நடித்திருக்கிறார். அபிஷேக் வர்மன் இயக்கியிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. மேற்குறிப்பிட்ட வெற்றிப் படங்களின் வரிசையில் ’2 ஸ்டேட்ஸ்’ படம் இடம் பிடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலக அளவிலேயே இன்று தமிழ் சினிமா பேசப்பட்டு வரும் இவ்வேளையில், தமிழ்நாட்டையும், தமிழ் கேரக்டர்களையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வரும் பாலிவுட்டினருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்! அவர்களது வெற்றிக்கு நம் தமிழும், தமிழ்நாடும் பயன்படுகிறது என்றால் அது தமிழ்நாட்டுக்கும் நமக்கும் பெருமை தரும் விஷயம் தானே! தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் பாலிவுட்!

சமீபகாலமாக பாலிவுட்டில் தயாராகும் பல படங்களில் தமிழ்நாடும், தமிழ் கேரக்டர்களும் முக்கிய இடம் பிடித்து வருகின்றன! இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ உட்பட பல படங்களை சொல்லலாம்.

’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பது மாதிரியே சித்தரித்திருப்பார்கள்! படத்தின் கதைபடி ஹீரோவாக வரும் ஷாருக்கான், தமிழ் பெண்ணாக வரும் தீபிகா படுகோனேவுக்கு ஒரு உதவி செய்யப் போய் மாட்டிக் கொள்கிறார். அதன் பிறகு ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள், சம்பவங்கள் என பயணிக்கும் கதையில் கடைசியில் இருவரும் இணைவது மாதிரி காட்டப்பட்டிருக்கும்! இதில் ஹீரோயினாக, தமிழ் பெண்ணாக தீபிகா படுகோனே நடிக்க, அவரது அப்பாவாக நிஜத்திலும் தமிழரான சத்யராஜ் நடித்திருப்பார்! ஷாருக்கான் தயாரித்து, ரோஹித் ஷெட்டி இயக்கிய இப்படம் வசூலில் சாதனை புரிந்தது நாடே அறியும்!

’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு முன் ராணி முகர்ஜி முக்கிய கேரக்டரில் நடித்து வெளிவந்த ’அய்யா’ ஹிந்திப் படத்திலும் தமிழையும், தமிழ் கேரக்டரையும் மையப்படுத்தி சித்தரித்திருந்தார்கள்! இந்தப் படத்தின் கதையில் மராட்டி பெண்ணாக வரும் ராணி முகர்ஜி, தமிழ் இளைஞரான சூர்யா (பிருத்திவி ராஜ்) மீது காதல் கொள்வதும், அதனால் ஏற்படும் திருப்பங்கள், கிளைமேக்ஸ் என்று இப்படத்திலும் தமிழ் முக்கிய இடம் பிடித்திருந்தது. சச்சின் குந்தல்கர் இயக்கிய இப்படமும் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் குறிப்பிடத்தக்க மற்றொரு படமாக அமைந்தது வித்யா பாலன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘டர்ட்டி பிக்சர்’. இந்தப் படம், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவையே கலக்கிய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தப் படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவின் கேரக்டரில் தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட வித்யா பாலன் நடித்து, பாக்ஸ் ஆஃபீசில் பெரிய வசூலை கொடுத்தார் என்பது இந்திய சினிமா உலகமே அறியும்!

மேற்குறிப்பிட படங்களின் வரிசையில் தமிழுக்கும், தமிழ் கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு, விரைவில் மற்றுமொரு ஹிந்திப் படம் திரைக்கு வரவிருக்கிறது. அப்படத்தின் பெயர் ‘2 ஸ்டேட்ஸ்’. இந்தப் படத்தின் கதை தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களை பற்றியது. . படத்தின் கதைப்படி ஹீரோ பஞ்சாபி இளைஞன்! ஹீரோயின் தமிழ் பெண்! இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது. இதனால் இவர்களது குடும்பத்தினருக்கிடையில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதை சுவாரஸ்யாக சொல்லும் கதையே ‘2 ஸ்டேட்ஸ்’ இந்தப் படத்தில் பஞ்சாபி இளைஞனாக அர்ஜுன் கபூர் நடிக்க, தமிழ் பெண்ணாக அலியா பட் நடித்திருக்கிறார். அலியாவின் அம்மாவாக நம்ம ஊர் ரேவதி நடித்திருக்கிறார். அபிஷேக் வர்மன் இயக்கியிருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. மேற்குறிப்பிட்ட வெற்றிப் படங்களின் வரிசையில் ’2 ஸ்டேட்ஸ்’ படம் இடம் பிடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலக அளவிலேயே இன்று தமிழ் சினிமா பேசப்பட்டு வரும் இவ்வேளையில், தமிழ்நாட்டையும், தமிழ் கேரக்டர்களையும் மையப்படுத்தி படங்களை எடுத்து வரும் பாலிவுட்டினருக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்! அவர்களது வெற்றிக்கு நம் தமிழும், தமிழ்நாடும் பயன்படுகிறது என்றால் அது தமிழ்நாட்டுக்கும் நமக்கும் பெருமை தரும் விஷயம் தானே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஷாருக்கான் சிக்ஸ் பேக் வொர்க் அவுட் - வீடியோ

;