ரசிகர்களை குழப்பும் ‘மான் கராத்தே’!

ரசிகர்களை குழப்பும் ‘மான் கராத்தே’!

செய்திகள் 28-Feb-2014 10:48 AM IST Chandru கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘மான் கராத்தே’ படத்தின் பாடல்கள் முதலில் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்யப்பட்டது. பின்னர் பாடல்களை மெருகேற்றும் பணிக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் படத்தின் ஆடியோ வெளியீட்டை வரும் மார்ச் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதே செய்தியை ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது. பின்னர் அறிவித்த நாளில் ஒரேயொரு பாடலையாவது வெளியிடலாம் என நினைத்ததோ என்னவோ, மார்ச் 1ஆம் தேதி ‘சிங்கிள் டிராக்’ வெளியிடப்படும் என்று சோனி நிறுவனம் அறிவித்தது.

சரி... மார்ச் 16ஆம் தேதி ஆடியோ வரட்டும் என காத்திருந்த ரசிகர்களை குழப்பும் வகையில் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் ‘மான் கராத்தே’ விளம்பரத்தில் ‘அனிருத் இசை நாளைமுதல்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்கள் ‘முடிவாக என்னதான் சொல்ல வருகிறார்கள்’ என புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

ரொம்ப குழப்பாதீங்கப்பா... கண்ணு வேர்க்குது!Sony Music South ‏@SonyMusicSouth 23h
#Maankarate single from the 1st of March!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;