போராடி வரிவிலக்கு பெற்ற உதயநிதி!

போராடி வரிவிலக்கு பெற்ற உதயநிதி!

செய்திகள் 28-Feb-2014 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, ஹீரோவாகவும் நடித்த படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்தப் படத்திற்கு தமிழக அரசின் கொள்கைபடி தமிழில பெயர் வைத்துள்ளதால் வரிவிலக்கு அளிக்க வேண்டும்! ஆனால் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க அரசு மறுத்துவிட்டது! இதனை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னௌ உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார்! இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால், ‘இது கதிர்வேல்ன் காதல்’ படத்தை தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து, அரசின் கொள்கை படி கேளிக்கை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்! இப்படம், வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் போராடி வரிவிலக்கு பெற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;