ரசிகர்களை இணைய வைத்த தல தளபதி!

ரசிகர்களை இணைய வைத்த தல தளபதி!

செய்திகள் 28-Feb-2014 9:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரே நாளில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே 50வது நாளை கடப்பது தமிழ்சினிமாவில் எப்பொழுதாவது அரிதாகவே நடக்கும். இந்த அரிய சம்பவத்தை ‘தல’ அஜித்தும், ‘தளபதி’ விஜய்யும் தற்போது இணைந்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி விஜய் நடிப்பில் நேசன் இயக்கிய ‘ஜில்லா’, அஜித் நடிப்பில் சிவா இயக்கிய ‘வீரம்’ ஆகிய இரண்டு படங்களும் உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகின. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்த்ததுபோல் பிரம்மாண்டமான ஓபனிங் கிடைத்தது. அதேபோல் இரண்டுமே தங்களது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்ததால் தொடர்ந்து வந்த நாட்களிலும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஏற்கெனவே விஜய், அஜித் படங்கள் ஒரே சமயத்தில் இணைந்து வெளியாகி இருக்கின்றன. ஆனால், அந்த சமயங்களில் பெரும்பாலும் ஏதாவது ஒரு படம் மட்டுமே பெரிய அளவில் ஜெயிக்க, மற்றொரு படம் தோல்வியைச் சந்தித்தது. அப்பொழுது இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமிடையே பெரிய கருத்துச் சண்டை இணையதளங்களிலும், போஸ்டர் வாசகங்களிலும் எதிரொலிக்கும். ஆனால், இந்தமுறை தங்களது ஆதர்ச நாயகனின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இரண்டுமே 50வது நாளைத் தொட்டிருப்பதால் ‘தல தளபதி’ ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த இரட்டை வெற்றியால் இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாகியிருப்பதாக தமிழ்சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

போட்டி என்பது ஆரோக்கியமாக இருக்கும் வரை சினிமாவுக்கும் நல்லது... ரசிகர்களுக்கும் நல்லது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;