பாலிவுட்டில் மீண்டும் ரேவதி!

பாலிவுட்டில் மீண்டும் ரேவதி!

செய்திகள் 27-Feb-2014 5:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது டிவி நிகழ்ச்சிகளில் பிசியாகிவிட்ட நடிகை ரேவதி, சினிமாவை பொறுத்தவரை கொஞ்சம் ஒதுங்கிதான் இருக்கிறார்! நல்ல கேரக்டர் அமையும்போது மட்டும் சினிமாவில் தலைகாட்டும் ரேவதி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ’ஒஸ்தி’. இந்தப் படத்தை தொடர்ந்து ரேவதி நடித்துள்ள ம் ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படம் இன்னும் ரிலீசாகவில்லை! ஆனால், ரேவதி தற்போது ’2 ஸ்டேட்ஸ்’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அபிஷேக் வர்மன் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அலியா பட்டின் அம்மாவாக நடிக்கிறார் ரேவதி! அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகவிருக்கிறது. ஏற்கெனவே பல ஹிந்திப் படங்களில் நடித்துள்ள ரேவதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹிந்தி படம் ’நிஷப்த்’. இப்படம் 2007-ல் வெளியானது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு ரேவதி நடிக்கும் ஹிந்தி படம் ‘2 ஸ்டேட்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;