மோகன்லாலுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை!

மோகன்லாலுக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை!

செய்திகள் 27-Feb-2014 3:40 PM IST VRC கருத்துக்கள்

‘கல்யாண சமையல் சாதம்’ படத்தை தொடர்ந்து, தான் இயக்கும் முதல் மலையாள படமான ’பெருச்சாழி’யின் வேலைகளில் பிசியாகி விட்டார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்! இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாகவிருக்கும் இப்படம் தற்போதைய சமூக பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் கதையாம்! இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ராகினி நந்துவானி நடிக்கிறார்!

இவர் விஜய்யுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, அரோரா இசை அமைக்கிறார். ‘ஸ்பைடர் மேன்’, ’இன் டைம்’ ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் அமைத்த மதுசூதனன் தான் இந்தப் படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸையும் கவனிகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;