இயக்குநர் வ.கௌதமன் அறிக்கை!

இயக்குநர் வ.கௌதமன் அறிக்கை!

செய்திகள் 27-Feb-2014 1:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘‘மார்ச் மாதம் 1,2 தேதிகளில் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து விஜய் டிவி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை St.Joseph கல்லூரியிலும் விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி’ நடப்பதாக அறிந்தோம். இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்கு காட்டும் இலங்கை அரசின் ராஜதந்திர நிகழ்வாக தான் இது நடக்கிறது. இதற்கு விஜய் டிவியும் துணை போவது கொடுமையானது.

தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு, சர்வதேச பன்னாட்டு விசாரணை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார். இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும், அதற்கு விஜய் டிவி துணை போவதும் வருந்ததக்க விஷயம். எனவே இதை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நடத்தக்கூடாது’’ என்று இயக்குநர் கௌதமன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;