‘அந்நியன்’ ஸ்டைலில் ‘ஐ’!

‘அந்நியன்’ ஸ்டைலில் ‘ஐ’!

செய்திகள் 27-Feb-2014 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால் விக்ரம் ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கும் உழைப்பு அபாரமானதாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் தன் கெட்அப்பை மாற்றுவது, உடல் எடையை ஏற்றி இறக்குவது என வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார். மற்ற இயக்குனர்களின் படங்களுக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்திற்காக என்னவெல்லாம் செய்வார்?

ஏற்கெனவே ஷங்கரின் ‘அந்நியன்’ படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கெட்அப்களில் தோன்றி, மூன்றிற்கும் ஒவ்வொருவிதமான குரல்களில் பேசி அசத்தியிருப்பார். தற்போது ‘ஐ’ படத்திலும் இதேபோன்ற பாணியில் பேசி வருகிறார் விக்ரம்.

‘ஐ’ படத்திற்காக பல தோற்றங்களில் வரும் விக்ரம், ஒவ்வொரு தோற்றத்திற்கும் ஒவ்வொருவிதமான குரலில் பின்னணி பேசுகிறாராம். ஏற்கெனவே இப்படத்தின் ஒரு தோற்றத்திற்கான பின்னணி வேலைகளை முடித்துவிட்டாராம் விக்ரம். இன்னும் மீதமிருக்கும் தோற்றங்களுக்கு தனித்தனி வாய்ஸில் பேசி அசத்தவிருக்கிறார். விக்ரமின் இந்த முயற்சிக்கு ‘அந்நியன்’ படத்தைப் போன்றே ‘ஐ’ படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள் ஷங்கரின் நெருங்கிய வட்டாரங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;