45 நாட்கள் ஓடிய விதார்த்!

45 நாட்கள் ஓடிய விதார்த்!

செய்திகள் 27-Feb-2014 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விதார்த், ஹார்திகா ஷெட்டி நடிக்கும் படம் 'ஆள்'. ஹிந்தியில் வெளிவந்த 'ஆமீர்' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் இது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய இயக்குனர் ஆனந்த்கிருஷ்ணா.

‘‘ஹிந்தியில் வெளிவந்த 'ஆமீர்' படத்தை தமிழுக்கேற்ப சில மாற்றங்களை செய்து விதார்த்தை சிட்டி கெட்-அப்பில் நடிக்க வைத்துள்ளேன். அவருக்கு இப்படம் தமிழ் சினிமாவில் பெரிய ஒரு இடைத்தை பெற்றுத் தரும். இந்தப் படத்தை சென்னையில் இதுவரை படம் பிடிக்காத பல இடங்களில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் படம் பிடித்துள்ளோம். இப்படம் ஒரே நாளில் நடக்கும் கதை. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இப்படத்தைப் பற்றி பேசிய விதார்த், ‘‘முதலில் ‘ஆமீர்’ படத்தின் ‘டிவிடி’யை கொடுத்து பார்க்கச் சொன்னார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா. படத்தை பார்த்ததும் பிடித்து விட்டது. ஆனால் சிட்டி கெட்-அப்பில் கோட் – சூட் போட்டு நடிப்பது சரியா வருமானு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குனர் பிரபு சாலமன் போல ஆனந்த் கிருஷ்ணாவும் என்னை தயார்படுத்திக் கொண்ட பிறகுதான் நடிக்க வைத்தார். படத்தை பார்த்துவிட்டேன். ரொம்ப நல்லாயிருக்கு. எல்லோரும் நான் நல்லா நடிச்சிருக்கேன்ன்னு சொல்றாங்க. அதுக்கு முழு காரணம் ஆனந்த் கிருஷ்ணா தான். இந்தப் படத்தின் திரைக்கதை பாணி எனக்குப் பிடித்தது. 45 நாள் ஷூட்டிங்! என்னை சுற்றி எனக்கு பின்னப்பட்ட வலையில் மாட்டி கொண்டவனா உயிரைக் காப்பாற்ற, ஓடிக்கொண்டேயிருப்பது மாதிரியான கேரக்டர் எனக்கு! இப்படத்திற்காக, நான் இதுவரை பார்க்காத வட சென்னையை ஓடிக்கொண்டே பார்த்து விட்டேன்! இந்தப் படம் மூலம் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா பேசப்படுவார் என்பது நிச்சயம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டிரைலர்


;