கூட்டணி மாறும் மணிரத்னம்!

கூட்டணி மாறும் மணிரத்னம்!

செய்திகள் 27-Feb-2014 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், சந்தோஷ் சிவன், ரவி கே.சந்திரன் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களுடன் கை கோத்து படங்களை இயக்கி வந்த மணிரத்னம், அடுத்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுடன் இணைந்து படத்தை இயக்க இருக்கிறார்! ‘அந்நியன்’, ‘தசாவதாரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பர்ஃபி’ (ஹிந்தி) போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளரக பணிபுரிந்த ரவி வர்மன் முதன் முதலாக மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்! மணிரத்னம் இயக்கிய சமீபகால படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், தனது அடுத்த படத்தை ஒரு சூப்பர் ஹிட் படமாக தர வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் மணிரத்னம்! இதற்காக நடிகர்கள் நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஃபஹத் ஃபாசில், ஐஸ்வர்யா ராய் முதலானோரை கமிட் செய்து வைத்துள்ள மணிரத்னம், தனது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் கூட்டணி அமைத்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;