விஷாலுக்கு கைகொடுப்பாரா ஜி.வி.பிரகாஷ்?

விஷாலுக்கு கைகொடுப்பாரா ஜி.வி.பிரகாஷ்?

செய்திகள் 27-Feb-2014 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் துணிந்து களமிறங்கிய முதல் படமான ‘பாண்டியநாடு’ 100 நாட்களைக் கடந்ததில் சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் விஷால். தற்போது திருவின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை ‘யுடிவி’யுடன் இணைந்து தயாரிக்கிறது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’. ‘பாண்டியநாடு’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் விஷாலுக்கு ஜோடி லக்ஷ்மிமேனன்தான். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது இதன் பாடல்களையும் வெற்றிபெறச் செய்யும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது ‘நான் சிகப்பு மனிதன்’ டீம்!

ஏற்கெனவே திரு - விஷாலின் கூட்டணியில் உருவான இரண்டு படங்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பாளர். ஆனால், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்காக முதன் முறையாக ஜி.வி.பிரகாஷுடன் களமிறங்கியிருக்கிறது இந்தக் கூட்டணி. ‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றியில் பாடல்களுக்கும் பங்குண்டு என்பதால், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் பாடல்களும் ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் அமைய வேண்டும் என ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் ஹீரோ.

விஷாலின் நம்பிக்கைக்கு ஜி.வி.பிரகாஷ் கைகொடுப்பாரா என்பது வரும் மார்ச் 13ஆம் தேதி வெளியாகும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் பாடல்களைக் கேட்டால் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;