கோச்சடையானில் இணையும் அமிதாப்!

கோச்சடையானில் இணையும் அமிதாப்!

செய்திகள் 27-Feb-2014 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினியின் ’கோச்சடையான்’ படம் ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீசாகிறது அல்லவா? இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் (மார்ச்) 9–ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட இருக்கிறார். ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மிணி தேவி, சரத்குமார், ஆதி, நாசர் முதலானோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில், மற்ற பாடல்களுக்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;