‘அபூர்வ நாயகன்’ கமலஹாசன்!

‘அபூர்வ நாயகன்’ கமலஹாசன்!

செய்திகள் 27-Feb-2014 9:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் ‘பத்மபூஷன்’ விருது கிடைத்த சந்தோஷத்தில் இருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை கௌவரப்படுத்தும் வகையில் அவரின் திரையுலக சாதனைகள் குறித்த ‘அபூர்வ நாயகன்’ என்ற புத்தம் நேற்று வெளியிடப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில், இப்புத்தகத்தை உருவாக்கிய ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜன் இப்புத்தகத்தை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

இந்தப் புத்தகத்தில் கமல்ஹாசனின் பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதோடு கமலின் சாதனைகளை விளக்கும் வகையில் சில கவிஞர்களின் கவிதைகளும், கமலின் திரையுலக சாதனைகள் குறித்த புள்ளிவிபரங்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.

இப்புத்தகம் வெளியிட்டது குறித்து குறிப்பிட்ட கே.ஆர்.நாகராஜன், “1960-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சிறு பையனாக நுழைந்து இன்றுவரையிலும் தனது கடின உழைப்பால், வித்தியாசமான முயற்சிகளால் தமிழ்ச் சினிமாவின் புகழை உயர்த்தியிருக்கும் கமல்ஹாசனுக்கு ராமராஜ் காட்டன் நிறுவனம் செய்திருக்கும் ஒரு சிறிய சமர்ப்பணம் இது...” என்றார்.

உலகநாயகனின் சாதனைக்கிரீடத்தில் மேலும் ஒரு மயிலிறகாக காட்சியளிக்கட்டும் இந்த ‘அபூர்வ நாயகன்’ புத்தம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;