ஹிந்தியில் ஒரு ‘ராஜா ராணி’!

ஹிந்தியில் ஒரு ‘ராஜா ராணி’!

செய்திகள் 27-Feb-2014 10:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அட்லியின் அறிமுகப் படமான ‘ராஜா ராணி’யின் புரமோஷனுக்காக ஆர்யா - நயன்தாராவுக்கு கல்யாணம் என இன்விடேஷன் அடித்து பட்டி தொட்டியெங்கும் பரபரப்பை பற்ற வைத்தார்கள். அவர்களின் அந்த டெக்னிக் நன்றாக வேலை செய்ய படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. கிடைத்த எதிர்பார்ப்பை சரியாகப் பயன்படுத்திய ‘ராஜா ராணி’ படமும் கடந்த 2013ன் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்து அசத்தியது.

தற்போது ஹிந்தியில் உருவாகும் ஒரு படத்திற்கும் இதே ஸ்டைலில் புரமோஷனில் இறங்கியுள்ளனர் பாலிவுட்காரர்கள். அர்ஜூன் கபூர், அலியா பட் இணைந்து நடிக்கும் ‘2 ஸ்டேட்ஸ்’ என்ற பாலிவுட் படத்தின் ‘புரமோ லாஞ்ச்’ அழைப்பிதழை ஒரு கல்யாணப் பத்திரிகை போல் உருவாக்கி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் நாயகி அலியா பட்டும் தன் பங்கிற்கு அந்த அழைப்பிதழை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து ‘‘எனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது...’ என ட்வீட்டியிருந்தார். இதைப் படித்தவர்கள் முதலில் அலியாவுக்கு உண்மையிலேயே கல்யாணம் என நினைத்து வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளனர். பிறகு அந்த அழைப்பிதழை முழுமையாகப் படித்தபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிய வந்திருக்கிறது. வரும் ஏப்ரலில் வெளியாகவிருக்கும் இப்படத்தை இயக்குபவர் அபிஷேக் வர்மன்.

நம்மூர் ‘ராஜா ராணி’க்கு கிடைத்த வெற்றி ‘2 ஸ்டேட்ஸ்’ படத்திற்கும் கிடைக்குமா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;