நயன்தாராவுக்கு சிலை வைத்தவர் ஹீரோவானார்!

நயன்தாராவுக்கு சிலை வைத்தவர் ஹீரோவானார்!

செய்திகள் 26-Feb-2014 4:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூது கவ்வும்’ படத்தில், ஊரில் நடிகை நயன்தாராவின் சிலை வைத்ததற்காக ஒரு இளைஞனை அந்த ஊரை விட்டே துரத்துவார்கள்! இப்படி ஊரை விட்டு துரத்தப்பட்ட அந்த இளைஞராக நடித்தவர் சிம்ஹா! ‘சூது கவ்வும்’ படம் தவிர ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் சிம்ஹா இப்போது ஹீரோவாகி இருக்கிறார்! படத்தின் பெயர் ‘உறுமீன்’. ஜீரோ ரூல்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் டாக்டர் சிவபாலன் மற்றும் ‘காபி சினிமாஸ்’ இணைந்து தயாரிக்கும் படம் இது. இந்தப் படத்தை சக்திவேல் பெருமாள் சாமி இயக்குகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இந்தப் படத்தில் சிம்ஹாவுக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைக்க, இந்த விழாவில் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவை ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;