மகனுக்காக டான்ஸ் ஆடிய ஷில்பா ஷெட்டி!

மகனுக்காக டான்ஸ் ஆடிய ஷில்பா ஷெட்டி!

செய்திகள் 26-Feb-2014 4:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தன் மகனுக்காகவே சினிமாவில் டான்ஸ் ஆடியிருக்கிறார் பாலிவுட் ஹீரோயின் ஷில்பா ஷெட்டி! ஹர்மன் பவேஜா, சன்னி தியோல் இணைந்து நடிக்கும் படம் ‘டிஷ்கியூம்’. இந்தப் படத்திற்காக தான் ஷில்பா ஷெட்டி டான்ஸ் ஆடியிருக்கிறார்! இது ஷில்பா ஷெட்டி தயாரிக்கும் முதல் படம் என்பதும், திருமணமாகி குழந்தைக்கு தாய் ஆன பிறகு நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்காக ஷில்பா நடனம் ஆடியதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு! இது குறித்து ஷில்பா கூறும்போது, ‘‘என் மகன் வியான் குந்தராவுக்கு பாட்டு, நடனம் என்றால் ரொம்ப ப்ரியம்! அவன் ஏதாவது ஒரு பாட்டை கேட்டாலே நடனம் ஆட ஆரம்பித்து விடுவான்! அதனால் அவனுக்காக நானே ஒரு நடனம் ஆடினால் என்ன என்று என் மனதுக்குள் தோன்றியது! அவனை மகிழ்விக்கவே இந்த நடனம்’’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;