சத்யராஜுடன் ஏழு கடல் தாண்டும் பரத்!

சத்யராஜுடன் ஏழு கடல் தாண்டும் பரத்!

செய்திகள் 26-Feb-2014 2:53 PM IST VRC கருத்துக்கள்

பரத் கடுமையாக உழைத்து நடித்த படம் ‘ஐந்து ஐந்து ஐந்து’. எதிர்பார்த்த வெற்றியை பெறாத இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘கூதற’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் பரத்! இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லட்சத்தீவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறுபட்ட ஒரு கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் மோகன்லாலும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார்! ’ஃபார் த பீப்பிள்’ என்ற ஹிட் படத்தின் மூலம் மலையாளத்தில் பிரபலமான பரத், தனது அடுத்த மலையாள படமான ’கூதறா’வை ரொம்பவும் நம்பி இருக்கிறார்.

’ஐந்து ஐந்து ஐந்து’ படத்தை தொடர்ந்து தமிழில் தனது அடுத்த படமாக ‘ஏழு கடல் தாண்டி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் பரத். செந்தில் குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆர்மபமாகவுள்ளது. இந்தப் படத்தில் பரத்துடன் சதயராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க, கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. வெங்கடேஷ் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்த ‘கில்லாடி’ என்ற படம் இன்னமும் ரிலீசாகாமல் இருப்பது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;