சிம்பு, த்ரிஷாவின் மறக்க முடியாத நாள்!

சிம்பு, த்ரிஷாவின் மறக்க முடியாத நாள்!

செய்திகள் 26-Feb-2014 12:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கௌதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, த்ரிஷா கூட்டணியில் உருவாகி, குறிப்பாக இளம் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட படம், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இவர்கள் நான்கு பேரின் படப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் வகையில் அமைந்த இந்தப் படம் இதே நாளில், அதாவது கடந்த 2010 ஃபிப்ரவரி 26-ஆம் தேதி ரிலீசானது. ஏற்கெனவே ‘அலை’ படத்தில் சிம்பு - த்ரிஷா இணைந்து நடித்திருந்தார்கள் என்றாலும் இவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது ’விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் தான்!

நான்கு ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் நம் கண்முன் நிற்கும் அந்த படத்தின் கதை சொல்லுதல் பாணியும், கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா முதலானோரின் இயல்பான நடிப்பும் இந்தப் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கியது. ’விடிவி’ வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது அதே கௌதம் மேனன் - சிம்பு இணைந்து உருவாக்கி வரும் படம் மீதும் ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு என்றால் அது இயல்புதான்! கௌதம் மேனன் - சிம்பு மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை எப்போது பார்க்க முடியும் என்பதுதான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பும் கேள்வியும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;