‘மான் கராத்தே’ ஆல்பத்தில் என்னென்ன ஸ்பெஷல்?

‘மான் கராத்தே’ ஆல்பத்தில் என்னென்ன ஸ்பெஷல்?

செய்திகள் 26-Feb-2014 11:00 AM IST Chandru கருத்துக்கள்

விஜய், அஜித்துக்கு இசையமைக்கும் சந்தோஷத்தில் இருக்கும் அனிருத்தின் அடுத்த ஆல்பம் ‘மான் காரத்தே’. வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்த ஆல்பத்தில் என்னென்ன சிறப்புகள் காத்திருக்கின்றன தெரியுமா?

மொத்தம் 5 பாடல்களைக் கொண்ட இந்த ஆல்பத்தில், முதல் பாடலை இசையமைப்பாளர் அனிருத்தே பாடியிருக்கிறார். ‘மாஞ்ஜா...’ எனத் தொடங்கும் இந்தப் பாடலின் வரிகளை இளமைக் கவிஞர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.

ஆல்பத்தின் அடுத்த பாடலின் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் பென்னி தயாளும், சுனிதி சௌகானும். ‘டார்லிங் டம்பக்கு...’ எனத் தொடங்கி யூத்களை ஆட வைக்கவிருக்கும் இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் யுகபாரதி. அனேகமாக ‘ஃபர்ஸ்ட் லுக்’ டீஸரின் பின்னணியில் ஒலித்த பாடலாக இது இருக்கலாம்.

ஆல்பத்தின் மூன்றாவது பாடலான ‘உன் விழிகளில்...’ நிச்சயம் நம்மை மெய்மறக்கச் செய்யும் மெலடியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இப்பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இந்தப் பாடலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இப்பாடலை எழுதியிருப்பவர் சிவகார்ததியனுக்கு நெருக்கமானவரும், படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசருமான ஆ.டி.ராஜா.

இந்த ஆல்பத்தின் அடுத்த பாடலான ‘ராயபுரம் பீட்டர்...’ பாடலை எழுதியிருப்பவரும் ஆ.டி.ராஜாவே. ரசிகர்களுக்கு வித்தியாச விருந்தாக அமையவிருக்கும் இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேனும், நாட்டுப்புற பாடல் ஸ்பெஷல் ‘பரவை’ முனியம்மாவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்கு தியேட்டர்கள் அதிரப் போவது நிச்சயம் என்பது இப்பாடலைப் பாடியிருக்கும் பாடகர்களின் காம்பினேஷனைப் பார்த்தாலே தெரிகிறது.

நீண்டநாட்களாக தேவாவின் குரலைக் கேட்காமல் இருந்த ரசிகர்களுக்கு ‘மான் கராத்தே’ ஆல்பத்தின் கடைசி பாடலான ‘ஓபன் தி டாஸ்மாக்....’ அந்தக் குறையை நிவர்த்தி செய்யும். இந்தப் பாடலை தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் அனிருத்!

மொத்தத்தில், சிவகார்த்திகேயன் & ஹன்சிகாவின் வித்தியாசமான காம்பினேஷனைப் போலவே ‘மான் கராத்தே’ ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாகவே அமைந்திருப்பதால் ‘ப்ளாக்பஸ்டர் ஆஃப் தி இயரா’க அமையுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;