‘விளையாட்டாய்’ மாறும் தமிழ் சினிமா!

‘விளையாட்டாய்’ மாறும் தமிழ் சினிமா!

கட்டுரை 26-Feb-2014 10:50 AM IST VRC கருத்துக்கள்

எற்கெனவே ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வந்துள்ளன! அந்த வரிசையில் இப்போது மீண்டும் பல ஸ்போர்ட்ஸ் கதைகள் திரைப்படமாகி, அதில் முதலாவது படமாக விரைவில் ரிலீசாகவிருக்கிறது ‘வல்லினம்’. பாஸ்கட் பால் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ‘ஈரம்’ புகழ் அறிவழகன் இயக்கியிருக்கிறார். இதில் பாஸ்கட் பால் விளையாட்டு வீரராக, கதையின் நாயகனாக நகுல் நடித்திருக்க, ஜோடியாக மிருதுளா நடித்திருக்கிறார். இன்றைக்கு கிரிக்கெட் விளையாட்டை தலை மீது வைத்து கொண்டாடுகிறார்கள்! அதே மாதிரி பாஸ்கட் பால் விளையாட்டுக்கும் ஆதரவு கொடுங்கள், இந்த விளையாட்டையும் ஊக்கப்படுத்துங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி சொல்லியிருக்கும் இப்படம் 28-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை ’ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பூலோகம்’ படம் பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. கல்யாண கிருஷ்ணன் இயக்கி வரும் இந்தப் படத்தில் ‘ஜெயம்’ ரவி பாக்சிங் வீரராக நடிக்க, அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஏற்கெனவே, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் பாக்சிங் வீரராக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார் என்றாலும், ‘பூலோகம்’ முழுக்க முழுக்க அப்படத்திலிருந்து மாறுபட்ட ஒரு கதையை சொல்லும் படமாம்! ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.


இந்தப் படங்கள் தவிர, அதர்வா நடிப்பில் ரவி அரசு இயக்கி வரும் ‘ஈட்டி’ படமும் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம்தான்! இந்தப் படத்தின் கதைபடி நாயகன் அதர்வா ஒரு தடகள வீரர்! அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இது. இந்தப் படத்தை பற்றி இயக்குனர் ரவி அரசு கூறும்போது, ‘‘ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான விஷயங்களில் நம் நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை இப்படம் வெளிச்சம் போட்டு காட்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட படங்கள் தவிர, இன்று உலக அளவில் கொண்டாடும் கிரிக்கெட்டை மையமாக எடுத்து எடுக்கும் படம் ‘ஜீவா’. கபடி விளையாட்டை பின்னணியாக வைத்து ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தை இயக்கிய சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் மீது இப்போதே ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தப் படத்தில் நிஜ கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் நடிக்க, ‘இவன் வேற மாதிரி’ புகழ் சுரபி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது படு ஸ்பீடாக நடந்து வருகிறது.


இந்தப் படங்கள் தவிர, ஷங்கர் இயக்கி வரும் ’ஐ’ படமும் ஸ்போர்ட்ஸ் பின்னணியில் சொல்லப்படும் கதை என்று கூறப்படுகிறது. எது எப்படியோ கபடி, பாஸ்கட் பால், ஓட்டப் பந்தயம், கிரிக்கெட் என பல விளையாட்டுக்களை கையில் எடுத்து படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் ஏன் பைக் ரேஸையோ, கார் ரேஸையோ மையமாக வைத்து படம் இயக்க முன் வரவில்லை! அப்படி இயக்குவதானால் அதற்கு பொருத்தமான் ஒரு நடிகர் இருக்கிறார்! அவர் யார் என்று எல்லோருக்கும் தெரியும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - டிரைலர்


;