கொண்டாட்டத்தில் ரஜினி குடும்பம்!

கொண்டாட்டத்தில் ரஜினி குடும்பம்!

செய்திகள் 26-Feb-2014 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். 1975-ல் வெளியான இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களிலும் நடித்து, படிபடியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார்! இந்திய திரையுலகிலேயே இதுவரை வேறு எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பல பெருமைகள் இவருக்கு கிடைத்திருக்கிறது. புகழின் உச்சத்தை தொட்ட ‘உச்ச நட்சத்திரம்’ ரஜினிகாந்த் என்றாலும், இன்னமும் அதே அன்பு, எளிமை, பணிவு, அடக்கத்தை கடை பிடித்து எல்லோரது மனங்களிலும் நல்ல ஒரு மனிதராகவும் விளங்கி வருபவர்!

ரஜினிகாந்த் அடைந்துள்ள இந்த புகழில் அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கும் மிக முக்கிய பங்குண்டு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனைவியார் லதாவை கரம் பிடித்து இன்றுடன் 33 ஆண்டுகள் ஆகிறது. தன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவருக்கும் அவர்களது விருப்பம் போல் திருமணம் செய்து வைத்து, அவர்களும் இன்று சந்தோஷமாக இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்! ஐஸ்வர்யா ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் பயணம் செய்து கொண்டிருக்க, சௌந்தர்யாவோ தன் தந்தை நடிப்பில் ‘கோச்சடையான்’ எனும் ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரித்து, மொத்த சினிமா உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று 33-ஆவது திருமண நாளை காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பம் கொண்டாட்டத்தில் இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;