வசனம் எழுதும் இளையராஜா!

வசனம் எழுதும் இளையராஜா!

செய்திகள் 25-Feb-2014 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘உதிரிப் பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ உட்பட பல கவனிக்கதக்க படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன்! தற்போது 23 வருடங்களுக்குப் பிறகு இளையராஜா இசையில் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் மகேந்திரன்! இந்த நீண்ட இடைவெளிக்கு அவர் சொல்லும் காரணம் ‘யாருக்காகவும் என் படைப்புகளில் சமரசம் செய்து கொள்வதில்லை’ என்பதே! புலமைபித்தன் எழுதிய ஒரு கதையில் வரும் ஒரு பகுதியைக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு பழம்பெரும் ஒளிப்பதிவாளர் லோகநாதனின் மகன் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு செய்பவர் மு.காசி விஸ்வநாதன்.

படத்தலைப்பு பற்றி இயக்குனர் மகேந்திரனிடம் கேட்டபோது, “நான் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜா தான் தலைப்பை கொடுத்தார்! ‘உதிரிப்பூக்கள்’ என்ற தலைப்பை வைத்ததும் அவர்தான்! இந்த படத்திற்கு அவர் எப்போது தலைப்பு கொடுக்கிறாரோ அப்போது நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன். மற்றப்படி தலைப்பு ரகசியம் எதுவும் இல்லை. எனது படங்களில் பின்னணி இசையின் மூலம் வசனகர்த்தாவாக விளங்கியவர் இளையராஜா. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திலும் இசை மூலம் அருமையான வசனங்களை கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கு’’ என்றார் மகிழ்ச்சியுடன் இப்படத்தை ‘ட்ரைடன் கிரியேட்டிவ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சரவணன் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;