‘பில்லா’, ‘ஆரம்பம்’ வரிசையில் தொடரும் நயன்தாராவின் ஆக்‌ஷன்!

‘பில்லா’, ‘ஆரம்பம்’ வரிசையில் தொடரும் நயன்தாராவின் ஆக்‌ஷன்!

செய்திகள் 25-Feb-2014 2:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'தில்லாலங்கடி’ படத்திற்குப் பிறகு ‘ஜெயம்’ ராஜாவும், ‘ஜெயம்’ ரவியும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் மூலம் ‘ஜெயம்’ ரவியுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் நயன்தாரா, இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘பில்லா’, 'ஆரம்பம்' படங்களில் ஆக்‌ஷன் கேரக்டரில் நடித்த நயன்தாராவுக்கு இப்போது அதுபோன்ற ஆக்‌ஷன் கேரக்டர்களே அமைகிறது போலும்! இந்தப் படத்தில் நயன்தாரா, ’ஜெயம்’ ரவியுடன் மோதுவது மாதிரி ஒரு காட்சி இருக்காம்! ஏற்கெனவே ‘ஆதிபகவன்’ படத்தில் நீத்துசந்திராவுடன் சண்டை போட்டு நடித்த ‘ஜெயம்’ ரவி, இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சண்டை போட்டு நடித்துள்ளார். அதுமாதிரி ஜீவா – நயன் தாரா இணைந்து நடித்த ‘ஈ’ படத்திலும் ஜீவா - நயன் தாராவுக்கு இடையில் ஒரு மோதல் காட்சி இருப்பது நினைவிருக்கலாம்! ஆக, நயன்தாரா நடிக்கும் படம் என்றால் அதில் ஒரு ஆக்‌ஷன் காட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;