விஜய் படத்தின் கதை? முருகதாஸ் விளக்கம்!

விஜய் படத்தின் கதை? முருகதாஸ் விளக்கம்!

செய்திகள் 25-Feb-2014 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’யை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெட் வேகம் பிடித்திருக்கிறது! இந்தப் படத்தில் விஜய்யுடன் வங்காள மொழி நடிகர் டோட்டா ராய் வில்லனாக நடிக்கிறார்! இவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக்காட்சியை சமீபத்தில் படம் பிடித்துள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்! இந்நிலையில் நடிகர் டோட்டா ராய் படத்தின் ஸ்டோரி லைன் பற்றியும் அதில் தனது கேரக்டர் குறித்தும் வெளியில் சொன்னார் என்று ஒரு தகவல் வெளியானது! ஆனால் அதை மறுத்து முருகதாஸ், ‘‘படத்தில் டோட்ட ராயும் ஒரு வில்லனே தவிர, அவர் முக்கிய வில்லன் கிடையாது! அவர் படத்தின் கதை குறித்தும் தன் கேர்கடர் குறித்தும் வெளியில் சொன்னார் என்று வந்த தகவலில் உண்மை இல்லை!’’ என்று கூறியிருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடந்து வருகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;