100 கோடி கிளப்பில் மீண்டும் பிரியங்கா சோப்ரா!

100 கோடி கிளப்பில் மீண்டும் பிரியங்கா சோப்ரா!

செய்திகள் 24-Feb-2014 3:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர், பிரியங்கா சோப்ரா முதலானோர் நடித்து, அலி அப்பாஸ் சஃபர் இயக்கிய படம் ’குண்டே’. பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்போடு சென்ற 14-ஆம் தேதி (காதலர் தினத்தன்று…) ரிலீசாகிய இப்பம் ரசிகர்களையும் ஏமாற்றவில்லை, படம் சம்பந்தப்பட்டவர்களையும் ஏமாற்றவில்லை! உலகம் முழுக்க ஒரே நாளில் வெளியான இப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது! பாலிவுட்டினர் தெரிவித்துள்ள ஒரு தகவலின் படி இப்படம் இந்தியாவில் 82 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 18 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது! திரையிடபட்ட எல்லா தியேட்டர்களிலும் இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

ஏற்கெனவே பிரியங்கா சோப்ரா நடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த ‘பர்ஃபி’, ‘க்ரிஷ் 3’, ‘ஷூட் அட் வடாலா’ ஆகிய படங்களின் வரிசையில் ‘குண்டே’ படமும் இணைந்திருப்பதால் இப்போது ரொம்பவும் ஹேப்பியாக இருக்கிறார் பிரியங்கா சோப்ரா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலையில்லா பட்டதாரி 2 - டிரைலர்


;