வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ டீஸர் ரெடி!

வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ டீஸர் ரெடி!

செய்திகள் 24-Feb-2014 12:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’ என வித்தியாசமான தமிழ்ப் படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்த படைப்பு ‘காவியத் தலைவன்’. சித்தார்த்தும் பிருத்விராஜும் இப்படத்தில் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களோடு வேதிகா, அனைகா சோட்டி, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ‘ஃபீரியட் ஃபிலிமா’க உருவாகும் இந்தப் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு நீரவ் ஷா. ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ சசியும், ‘ரேடியன்ஸ் மீடியா’ வருண் மணியனும் இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் டீஸர்’ வரும் வியாழக்கிழமை அன்று வெளிவரவிருக்கிறது. இயக்குனர் வசந்தபாலனும், நாயகன் சித்தார்த்தும் இப்படத்தின் மூலம் தங்களுக்கு பெரிய திருப்புமுனை ஏற்படும் என நம்பியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'காவியத்தலைவன்' படத்தை பற்றி விஜய்


;