சிம்புவின் ‘வாலு’ என்னாச்சு?

சிம்புவின் ‘வாலு’ என்னாச்சு?

செய்திகள் 22-Feb-2014 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு நடிக்கும், ‘வாலு’ படம் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் எப்போது ரிலீசாகும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்! பல கட்டங்களாக நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தறுவாயில் இருக்கிறது. இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்போடு முடிவுறுகிறதாம்! அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை சீக்கிரமாக முடித்து, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பு தரப்பினர்.

விஜயசந்தர் இயக்கி வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க, முக்கிய கேரக்டரில் சந்தானமும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசை அமைக்க, பல வெற்றிப் படங்களை தயாரித்த ’நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார்.

சிம்பு – ஹன்சிகா முதன் முதலாக இணைந்து நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;