சில்க்கை தொடர்ந்து ஷக்கீலா!

சில்க்கை தொடர்ந்து ஷக்கீலா!

செய்திகள் 21-Feb-2014 5:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பிக்சர்’. வித்யா பாலன் நடித்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து மலையாளத்திலும் சில்க்கின் கதை ’கிளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமானது. இந்தப் படத்தில் சில்க்காக சனாகான் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் ‘ஒரு நடிகையின் டைரி’ என்ற பெயரில் வெளியானது. ஆனால் இரண்டு மொழியிலும் இப்படம் வெற்றிபெறவில்லை.

அந்த வரிசையில் இப்போது தென்னிந்திய சினிமாவின் மற்றொரு கவர்ச்சி நடிகையான ஷக்கீலாவின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாகிறது. இதனை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் ஷக்கீலா கேர்கடரில் நடிப்பதற்கான நடிகையை தேடி வருகிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீ எங்கே என் அன்பே - இதோ இதோ


;