எதற்கும் அஞ்சாதவன் !

எதற்கும் அஞ்சாதவன் !

செய்திகள் 21-Feb-2014 3:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிக பெரிய அதிரடி படம், தமிழ் தவிர ஹிந்தி , தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. தமிழில் 'எதற்கும் அஞ்சாதவன் ' என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி, அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கேயும் வெளியாகிறது .

நியூயார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து வந்து நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது , அவரை காக்க ஸ்டீவ் முற்படும் போது , பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார். தனக்கு எதிரான சதிகளை முறியடித்து , தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோ மற்றும் பால்கன் உடன் இணைந்து போராடும் போது தான் அறிகிறார், அவர் இப்போது போராட போவது - தி வின்டர் சோல்ஜர் என்ற மாபெரும் மகா அழிவு சக்தி உடைய எதிரி என்பதை!

உலக பிரசித்தி பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் தொடரான கேப்டன் அமெரிக்காவின் முதல் பதிப்பு 1941 ஆம் வெளியிடப்பட்டது . அந்த தொடரின் பிரதிபலிப்பாக உலகமெங்கும் தற்போது திரை வடிவத்தில் வர இருக்கும் இந்த திரைப் படம் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;