‘எந்திரன்’ டீமிலிருந்து உருவான இயக்குனர்!

‘எந்திரன்’ டீமிலிருந்து உருவான இயக்குனர்!

செய்திகள் 21-Feb-2014 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய ஸ்ரீ இயக்கியுள்ள முதல் படம் 'டமால் டுமீல்'. வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை கேமியோ ஃபிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று காலை நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் மற்றும் செயலாளர் டி.சிவா கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட, சீனு ராமசாமி மற்றும் வெங்கட் பிரபு பெற்றுக்கொண்டனர். தயாரிப்பாளர்கள் சி.வி.குமார் மற்றும் ‘ஸ்டுடியோகிரீன்’ எஸ்.ஆர்.பிரபு முன்னிலையில் இயக்குனர்கள் அட்லி, கார்த்திக் சுப்புராஜ் டிரைலரை வெளியிட, நடிகர்கள் அஷ்வின், பிரேம்ஜி, பாபி சிம்மா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கேயார் பேசும்போது, “இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ-யை பார்க்கும்போது ஷங்கரிடம் இருந்த உழைப்பு, திறமை மட்டுமல்ல பணிவும் அப்படியே இருக்கிறது. பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும்போதே இந்த குழுவினரின் மொத்த உழைப்பும் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் வேண்டுமென்றே இடைஞ்சல் செய்ய ஒரே மாதிரி தலைப்பை பதிவு செய்கிறார்கள். இந்த படத்துக்கு போட்டியாக கூட ‘டமால்’ என்று ஒரு படத்துக்கு பேர் வைத்தார்கள். படமும் தலைப்பை போல ‘டமால்’ ஆனது. அதனால் இந்த படத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை.

உஷா உதூப் நிறைய வேலைகள் இருந்தாலும் கூட அதை விட்டு விட்டு இந்த படத்துக்காக வந்து முடியும் வரை இருந்து சிறப்பு சேர்த்திருப்பது பெருமையான விஷயம்” என்றார்.

முன்னதாக பேசிய டி.சிவா, “அம்மா திரையரங்கம் கொண்டு வந்ததன் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மேலும் சில நன்மைகளை தமிழக முதல்வர் செய்துள்ளார். அதற்கு நன்றி” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி Animals Gang - 2


;