எந்த படத்தை தேர்வு செய்கிறார் சல்மான்?

எந்த படத்தை தேர்வு செய்கிறார் சல்மான்?

செய்திகள் 21-Feb-2014 12:56 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின், ‘மசில்மான்’ சல்மான்கான் நடித்து சமீபத்தில் வெளியான ’ஜெய்ஹோ’, ஆஹா ஓஹோ என்று போகாத நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதை தேர்வில் மிகவும் கவனமாக இருக்கிறார் சல்மான் கான்! இந்நிலையில் இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யா சொன்ன டபுள் ரோல் கதை ஒன்று சல்மானுக்கு ரொம்பவும் பிடித்து விட்டதாம்! அதே மாதிரி போனி கபூர் தயாரிக்க இருக்கும் ’நோ என்ட்ரி மெயின் என்ட்ரி’ படத்தின் கதையும் சல்மானை கவர்ந்துள்ளதாம்.

இப்படம் ‘நோ என்ட்ரி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது! இதுவும் டபுள் ரோல் சப்ஜெக்ட்டாம்! இந்த இரு படங்களில் எந்தப் படத்தில் முதலில் நடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் சல்மான் கான்! இது தவிர அஜித்தின் ‘வீரம்’ படத்தை ஹிந்தியில் ரீ-மேக் செய்து நடிக்கவும் சல்மானுக்கு ஐடியா இருக்கிறது! சல்மான் கான், இந்த மூன்று கதைகளில் முதலில் எந்த கதையை தேர்வு செய்வார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்! 1997-ல் வெளியான ’ஜூட்வா’ படம் தான் சல்மான் கான் கடைசியாக நடித்த டபுள் ரோல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;