தனுஷின் அனேகனும் அடுத்தப் படமும்!

தனுஷின் அனேகனும் அடுத்தப் படமும்!

செய்திகள் 21-Feb-2014 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்த தனுஷ், ஒரு பிரேக் எடுத்து, அடுத்து பால்கி இயக்கும் ஹிந்திப் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ’ரான்ஜனா’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் ’பிக் பி’ அமிதாப்பச்சனும் நடிக்க, ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், இசைக்கு இளையராஜா என பால்கியுடன் நம்ம ஊர் பிரபலங்கள் பலர் கை கோர்த்திருக்கிறார்கள்! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மும்பையில் நடைபெறவிருக்க, அதில் கலந்துகொள்ள மும்பை செல்லவிருக்கிறார் தனுஷ்! இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பவர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் என்பது உங்களுக்கு தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;